அமைச்சர் பதவி மீது ஆசை இல்லை - கனிமொழி
திருச்சி: எனக்கு அமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழி கருணாநிதி கூறியுள்ளார்.
திருச்சியில், இந்திய தொழிலக சம்மேளனத்தின் மகளிர் மேம்பாடு குறித்த கருத்தரங்கம் நடந்தது. இதில் கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கனிமொழி பேசுகையில், எனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சிலர் கணிப்பதை நான் நம்பவில்லை. எனக்கு ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கிடையாது. எனக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா, கிடைக்காதா என்பது குறித்து தெரியாது.
எப்போது நான் அமைச்சர் ஆவேன் என்று கூற முடியாது. அமைச்சர் பதவி மீது எனக்கு ஆசை இல்லை.
இப்போது நான் உள்ள நிலையிலேயே மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். எனவே அடுத்து எனன என்ற சிந்தனை என்னிடம் இல்லை. அமைச்சர் பதவி கிடைக்குமா என்ற ஆரூடத்திற்குள் போகவும் நான் விரும்பவில்லை.
பெண்களுக்கான உரிமைகள் குறித்து பெண்களிடம் மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல் அதுகுறித்து ஆண்களிடமும் பிரசாரம் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. அப்போதுதான் பெண்களுக்கான உரிமைகள், சமத்துவம் குறித்து அவர்களுக்கும் புரியும்.
உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களால் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் ஊராட்சித் தலைவர்களுக்குப் பின்னால் அவர்களது கணவர்களும், சகோதரர்களும்தான் பினாமிகள் போல செயல்படுகிறார்கள்.
ஆனால் அந்த நிலை கொஞ்சம் மாறியுள்ளதாக கருதுகிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மேலும் சிறப்புடன் திறம்பட செயல்படுவார்கள் என நம்புகிறேன்.
பெண்களுக்கு சட்டசபைகளிலும், நாடாளுமன்றத்திலும் 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும் சட்டம் நிறைவேற நான் போராடுவேன். இதற்காக தனி அமைப்பை ஏற்படுத்திப் போராடவும் நான் யோசித்து வருகிறேன். இது கிடைக்கும் வரை போராடுவேன் என்றார் கனிமொழி.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications