மனைவி, குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை
கூடலூர்: கடன் தொல்லை காரணமாக கூலித் தொழிலாளி ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை வெட்டிக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
நீலகரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள சுல்தான்பத்தேரி நாய்கடவு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (41). கூலித் தொழிலாளி. இவருக்கு சுதா (38) என்ற மனைவியும், சிவபிரசாத் (15), அருண்பிரசாத் (13), அமுல்பிரசாத்(12) என்ற 3 மகன்களும் இருந்தனர்.
சிவக்குமாரின் வீடு சம்பவத்தன்று வெகுநேரமாக திறக்காததால், அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, சிவக்குமார் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார்.
அவரின் மனைவி சுதாவின் தலை தனியாக துண்டிக்கப்பட்டும், மகன்கள் மூவரும் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
மனைவி மற்றும் மகன்களுக்கு விஷத்தை கொடுத்து அவர்களை கொன்று விட்டு, சிவக்குமார் தானும் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.
கடன் தொல்லை காரணமாக சிவக்குமார் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சிவக்குமாரின் மனைவி சுதா கன்னடத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. மன உளைச்சலே காரணமாகும். எங்கள் வீட்டின் பீரோவில் உள்ள நகைகள் மற்றும் பணங்களை எடுத்து எங்களுடைய கடன்களை அடைத்து விடுங்கள் என்று எழுதி வைத்துள்ளார்.
குடும்பமே இறந்த சம்பவம் கூடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications