ஆந்திராவில் தண்டவாளம் மூழ்கியது-ரயில்கள் ரத்து, பல சென்னை ரயில்கள் தாமதம்
சென்னை: ஆந்திராவில் கன மழையால் நெல்லூர்-கூடூர் இடையே தண்டவாளம் நீரில் மூழ்கிவிட்டதால் சென்னை-விஜயவாடா இடையிலான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக சென்னை வரும் ரயில்கள் மிகவும் காலதாமதமாக வந்து கொண்டுள்ளன.
புயல் சின்னத்தில் ஆந்திரத்திலும் கன மழை பெய்து வருகிறது. இதில் நெல்லூர்-கூடூர் இடையே தண்டவாளம் நீரில் மூழ்கியது.
இதையடுத்து சென்னை-விஜயவாடா இடையிலான 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு காலை 7 மணிக்கு புறப்படும் ஜன சதாப்தி ரயிலும், பகல் 2 மணிக்கு கிளம்பும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அது போல சென்னை சென்ட்ரலில் இருந்து பகல் 2.30 மணிக்குக் கிளம்பும் விஜயவாடா ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலும், மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து புறப்படபம் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஆந்திரா வழியாக தமிழகம் வரும் 5 ரயில்களும் தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன. டெல்லியில் இருந்து காலை 6.15 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய ஜி.டி.எக்ஸ்பிரஸ், 7.10 மணிக்கு வர வேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், 7.10 மணிக்கு வரவேண்டிய சார்மினார் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் 3 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டுள்ளன.
அதேபோல பிலாஸ்பூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் 4 மணி நேர தாமதாக வந்து கொண்டுள்ளது. ஜம்முதாவி-சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலும் தாமதாக வந்து கொண்டிருக்கிறது.
நெல்லூர்-சென்னை இடையிலான இரண்டு வழித் தடங்களில் ஒரு வழித் தடத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுவிட்டது. இன்னொரு வழித் தடத்தில் தான் ரயில்கள் மிக மெதுவான வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் தான் மேலே குறிப்பிட்ட அனைத்து ரயில்களும் தாமதமாக வந்து கொண்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications