சென்னையில் 540 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்-ஒருவர் கைது
சென்னை: சென்னையிலிருந்து கோலாலம்பூருக்கு கடத்தப்படவிருந்த 500க்கும் மேற்பட்ட நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ராமநாபுரம் மாவட்டம் இளையாங்குடியைச் சேர்ந்தவர் அபுதாலி (35). இவர் நேற்றிரவு மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூர் செல்ல சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவரின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையிட்ட போது அவர் கொண்டுவந்த பைக்குள் ஏதோ நகர்வது போல் இருந்தது. உடனே அதிகாரிகள் அவரை தனியாக அழைத்து சென்று அவரின் பையை திறந்த பார்த்தனர்.
அதில் 540 நட்சத்திர ஆமைகள் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் அந்த ஆமைகளை பறிமுதல் செய்து அபுதாலியை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.4.5 லட்சம் ஆகும்.
கடந்த ஒரு வாரத்திற்குள் நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்தவது இது 2 வது முறையாகும்.
கடந்த 27ம் தேதி இதேபோன்று கோலாலம்பூர் செல்ல முயன்ற ஒரு பயணியிடம் இருந்து 557 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மலேசியா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் நட்சத்திர ஆமைகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. மருத்துவப் பயன்பாட்டுக்கு அங்கு நட்சத்திர ஆமைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் சென்னையிலிருந்து இந்த நாடுகளுக்கு அதிக அளவில் நட்சத்திர ஆமைகளை கடத்தும் செயல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications