கருணாநிதிக்கு தேவர் சமூக மக்கள் பாடம் புகட்ட வேண்டும்-ஜெ
மதுரை: மதரை, பூவந்தி கிராமத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 100 அடி உயர சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் சார்பில் மதுரை அருகே உள்ள பூவந்தியில், 100 அடி உயரத்தில் பிரமாண்ட தேவர் சிலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவும், 2ம் படை வீடு அமைக்கும் விழாவும் பூவந்தியில் இன்று நடந்தது.
இதில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். அவருக்கு தாரை, தப்பட்டை முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவை அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன் வரவேற்றார்.
பின்னர் தேவர் சிலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சியில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் தாவூத் மியா கான், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் ரவி வாண்டையார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசுகையில், சென்னை நந்தனம் பகுதியில், அண்ணா சாலையில், தேவர் திருமகனாருக்கு எனது ஆட்சிக்காலத்தில்தான் சிலை நிறுவப்பட்டது.
இப்போது 100 அடியில் அமையவுள்ள இந்த தேவர் சிலைக்கு அடிக்கல் நாட்டும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
தேவர் திருமகனார், தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டவர். ஆனால் முதல்வர் கருணாநிதியோ, தேச விரோத சக்திகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறார்.
தேவர் திருமகனாரின் கொள்கைகளை அவமதிக்கும் வகையில் நடந்து வரும் கருணாநிதிக்கு வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தேவர் சமூக மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
இதையடுத்து பசும்பொன் வந்த ஜெயலலிதா அங்கு முத்துராமலிங்கத் தேவரின் நூற்றாண்டு விழா மற்றும் குருபூஜை விழாவில் பங்கேற்று தேவரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications