மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஸ்டிரைக்: பாஸ்போர்ட், தபால் அலுவலக பணிகள் பாதிப்பு
சென்னை: 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 1 கோடி மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலியிடங்களை நிரப்ப வேண்டும், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும், அரசு வேலைகளில் அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக மத்திய அரசு அலுவலகங்கள் பெரும்பாலும் முடங்கியுள்ளன. மாநில அரசுகளின் ஊழியர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.
சென்னையில் தபால் அலுவலகங்கள், பிற மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வரவில்லை. இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
இதேபோல மாநில அரசு அலுவலகங்கள் சிலவற்றிலும் ஊழியர்கள் வராமல், அலுவலகங்கள் வெறிச்சோடியுள்ளன. இருந்தாலும் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வந்திருந்ததால் பணிகள் பாதிக்கப்படவில்லை.
அதேபோல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகள் வெறிச்சோடிக் கிடந்தன.
தமிழகத்தில் 2 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், 3 லட்சம் ஆசிரியர்களும், வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பதாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட், தபால் அலுவலக பணிகள் பாதிப்பு:
அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் இன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறைவான ஊழியர்களே வேலைக்கு வந்திருந்தனர்.
மக்கள் அதிகம் வரும் மத்திய அரசு அலுவலகங்களான தபால் மற்றும் தந்தி அலுவலகங்கள், பாஸ்போர்ட், சுங்க இலாகா, வருமானவரி உட்பட பல அலுவலகங்களில் அன்றாட பணிகள் பாதித்தன. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ரயில்வே துறை ஊழியர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications