தேவருக்கு அஞ்சலி: கருணாநிதிக்கு சு.சுவாமி கண்டனம்
சென்னை: முத்துராமலிங்கத் தேவரின் சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாத முதல்வர் கருணாநிதி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருப்பது கபட நாடகம் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், பசும்பொன் தேவர் திருமகனார் நிறைந்த இறைபக்தி கொண்டவர். ஆனால் கொஞ்சம் கூட கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கருணாநிதி.
தினந்தோறும் பூஜை செய்து, கடவுளை வழிபட்டு, இந்து மதத்தின் தீவிரப் பற்றாளராக விளங்கியவர் தேவர் திருமகனார். ஆனால் இந்துக்களைத் திருடர்கள் என்று கூறியவர் கருணாநிதி.
ராமர் பிரானை புனித அவதாரமாக கருதியவர் தேவர் திருமகனார். ஆனால் அந்த ராமரை குடிகாரர் என்று விமர்சித்தவர் கருணாநிதி.
ஆங்கில ஏகாதிபத்தியத்தை கடுமையாக எதிர்த்தவர் தேவர் திருமகனார். ஆனால் கருணாநிதியோ, பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குத் துணையாக இருந்தவர்.
அரசியல் கொள்கை மட்டுமல்லாது, தனிப்பட்ட வாழ்க்கையிலும், தேவர் திருமகனாரின் சிந்தனைகளுடன் ஒத்துப் போகாதவர் கருணாநிதி. அப்படிப்பட்டவர், தேவர் ஜெயந்தியை முன்னிட்டு, தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தச் சென்றது கபட நாடகம் என்று கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications