பெரியார் எழுதிய 'சச்சி ராமாயணம்'-பாஜக எரிப்பு போராட்டம்
லக்னோ: பெரியார் எழுதிய சச்சி ராமாயணம் என்ற நூலை இன்று லக்னோவில் பாரதிய ஜனதா தொண்டர்கள் எரித்துப் போராட்டம் நடத்தினர்.
ராமாயணம் குறித்த உண்மையை வெளிப்படுத்தி தந்தை பெரியார் தனது பாணியில் ஒரு நூல் எழுதியுள்ளார். இந்த நூல் சச்சி ராமாயணம் என்ற பெயரில் இந்தியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
இந்த நூலில் ராமர் குறித்து அவதூறாகக் கூறப்பட்டிருப்பதாக கூறி பாஜக மற்றும் பிற சங் பரிவார் அமைப்புகள், இந்த நூலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் புத்தகம் வெளி வந்து இத்தனை காலம் கழித்து பாஜகவினர் நூலுக்கு எதிர்ப்பது நியாயமற்றது, புத்தகத்தை தடுக்க தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று உ.பி. முதல்வர் மாயாவதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பாஜக மூத்தத் தலைவர் அத்வானி, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் ஆகியோர், பெரியார் எழுதிய சச்சி ராமாயணம் நூலின் விற்பனையைத் தடுக்குமாறு பாஜக தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், இன்று லக்னோவில் உள்ள சட்டசபை வளாகம் முன்பு பெரியாரின் சச்சி ராமாயணம் புத்தகத்தை பாஜகவினர் எரித்து போராட்டம் நடத்தினர். மேலும் பெரியாரை ஆதரிக்கும் மாயாவதி அரசை கடுமையாக விமர்சித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications