மாஜி டிஜிபி தலைமையில் கமிட்டி அமைத்து எனக்கு பாதுகாப்பு தர வேண்டும்-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கவும், கண்காணிக்கவும் ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும் என்றும் அந்த கமிட்டியில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. மற்றும் தனது விருப்பபடி ஓய்வு பெற்ற 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தாக்கல் ெசய்துள்ள பதில் மனுவில் ஜெயலலிதா கோரியுள்ளார்.

சமீபத்தில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்குள் தண்டபாணி என்ற நபர் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திமுக அரசு குறைத்து விட்டதாக ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.

தனக்கு 'உண்மையான' இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, ஜெயலலிதாவுக்கு குண்டு துளைக்காத கார் வழங்கப்பட்டது. ஆனால், அது அம்பாசிடர் கார் என்பதால் அதை ஜெயலலிதா நிராகரித்துவிட்டார். இப்போது கூட அந்தக் கார் தயார் நிலையில் தான் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அதை ஜெயலலிதாவுக்கு வழங்கத் தயார் என்றது.

இந் நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி சுகுணா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில்,

தமிழகத்தில் முன்பு முதலமைச்சராகவும், தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக 2001ம் ஆண்டு முதல் மத்திய அரசு இசட் பிளஸ் பாதுகாப்புப் பிரிவின் கீழ் முழுமையான பாதுகாப்பு வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு எனது முதலமைச்சர் பதவிக் காலம் முடிந்த பின் எனக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை தமிழக அரசு வேண்டுமென்றே குறைத்துவிட்டது.

நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது மட்டுமே தேசிய பாதுகாப்படை பாதுகாப்பு வழங்கப்படும். மற்ற நேரங்களில் இசட் பிளஸ் பிரிவின்படி மாநில அரசுதான் எனக்குரிய முழுமையான பாதுகாப்பை வழங்க வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்கவில்லை.

எனது வீட்டுக்குள் தண்டபாணி என்பவர் கடந்த 16ம் தேதி அத்துமீறி நுழைந்தார். ஆனால், அது தொடர்பாக காவல்துறையினர் என்னிடம் எந்த விசாரணையும் நடத்தவில்லை. மேலும் ராஜராஜன் என்பவரை பார்ப்பதற்காகவும், வேலை கேட்பதற்காகவும் தண்டபாணி என்பவர் வந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.

ராஜராஜன் என்பவர் எனது வீட்டில் வேலை பார்ப்பவர். அவர் பாதுகாப்பு அதிகாரி இல்லை. அவர் தான் தண்டபாணியை உள்ளே அனுமதித்தார் என்பதும் தவறு. மேலும் தண்டபாணி என்ன நோக்கத்திற்காக என் வீட்டுக்குள் நுழைந்தார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்த வேண்டும். எனக்கு 55 போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறுவது தவறு.

நான் குண்டு துளைக்காத காரை வாங்க மறுத்து விட்டதாக தமிழக உள்துறைச் செயலாளர் கூறியுள்ளார். நான் ஒருபோதும் குண்டு துளைக்காத கார் வேண்டாம் என்று கூறவில்லை. இதனை ஏற்க மறுத்து யாருக்கும் கடிதமும் எழுதவில்லை. அவர்கள் வழங்கினால் குண்டு துளைக்காத காரை பெற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்.

ஆந்திர மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு இசட் பிளஸ் பிரிவின்படி முழுமையான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. அதே போல் தமிழகத்தில் இசட் பிளஸ் பிரிவின் கீழ் உள்ள எனக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும். எனது பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கவும், கண்காணிக்கவும் ஒரு கமிட்டியை உருவாக்க வேண்டும்.

அந்த கமிட்டியில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. மற்றும் எனது விருப்பபடி ஓய்வு பெற்ற 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடம் பெற வேண்டும். இந்த குழு அமைத்து எனது பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஜெயலலிதா தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவிற்கு பதில் தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞர் விடுதலை காலஅவகாசம் கோரினார்.

அப்போது பேசிய நீதிபதி சுகுணா, இந்த வழக்கில் இரு தரப்பிலும் மாறி, மாறி பதில் மனு தாக்கல் செய்து கொண்டிருப்பதால் விசாரணை நீண்டு கொண்டே போகும். இந்த வழக்கில் இறுதி விசாரணை வரும் 6ம் தேதி நடக்கும் என அறிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+