சம்பத் விவகாரம்: அமைச்சர் மீது நடவடிக்கை கோரும் மதிமுக
கரூர்: நாஞ்சில் சம்பத் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய காரணமான தமிழக வருவாய் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மீது உடனே நடவடிக்கை எடுக்க வேணடும் கரூர் மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்படதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கரூர் மதிமுக சார்பில் அவசர கூட்டம் நடைபெற்றது.
அப்போது கரூர் நகர செயலாளர் பா.கி.தங்கராசு செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாஞ்சில் சம்பத் நாடறிந்த ஒரு நல்ல பேச்சாளர். நற்றமிழ் பேச்சாளர். அவரை தண்டிக்க வேண்டும் என்றே தீய நோக்கத்துடன் திமுக அரசு கைது செய்துள்ளது. இதை கரூர் மதிமுக மிக வன்மையாக கண்டிக்கிறது.
வத்தலகுண்டில் போலீசாரிடம் முறையாக அனுமதி பெற்று பொது கூட்டம் போடப்பட்டுள்ளது. இந்த பொதுக் கூட்டத்தில் வன்முறை ஏற்படுத்திய அமைச்சர் ஐ.பெரியசாமி மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை சிறையில் ரவுடிகள் சம்பத்தை தாக்கியது மிகவும் கண்டிக்கதக்கது.
தமிழக முதல்வர் தன் மீதும், உள்ளாட்சி துறை அமைச்சர் மீதும் தகாத வார்த்தைகள் பேசியதாக கூறியதோடு, நாஞ்சில் சம்பத் தாக்குதலுக்கு திமுகவினர் காரணம் அல்ல என கூறுவது வேடிக்கையானது.
இந்தத் தாக்குதல் தமிழக முதல்வர் கூறித் தான் நடத்தப்பட்டுள்ளது என தெரியவருகிறது. நாஞ்சில் சம்பத் பொதுக் கூட்டத்தில் வன்முறை ஏற்படுத்திய அமைச்சர் பெரியசாமி மீது உடனே உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications