என்டிடிவி நிருபரை தாக்கிய பீகார் எம்எல்ஏ
பாட்னா: ஒரு கொலை தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏவிடம் பேட்டி எடுக்க சென்ற பிரபல தனியார் தொலைக்காட்சி நிருபரை அந்த எம்எல்ஏ காட்டு மிராண்டித்தனமாக தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆனந்த் சிங். இவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவாக இருக்கிறார். ரேஷ்மா என்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இவர் சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இந்த கொலை தொடர்பாக ஆனந்த் சிங்கிடம் கருத்து கேட்பதற்காக பிரபல தனியார் தொலைக்காட்சியான என்டிடிவியின் நிருபர் பிரகாஷ்சிங் கேமரா மேனுடன் சென்றார்.
பேட்டி எடுக்க சென்ற தனியார் டிவியின் நிருபர் பிரகாஷ் சிங் மற்றும் கேமராமேனை எம்எல்ஏவும் அவருடைய பாதுகாவலர்கள் மற்றும் தொண்டர்களை சேர்ந்து கடுமையாக தாக்கி கேமராவை உடைத்து நொறுக்கியதுடன் என்டிடிவி ஒளிபரப்பு செய்யும் வேன் சாவியையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.
இந்த தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அனைத்து தொலைக்காட்சி நிருபர்களும் உடனே எம்எல்ஏ ஆனந்த் சிங்கின் வீட்டு முன்னர் கூடி அவரை கைது செய்யக் கோரி கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து அந்த எம்எல்ஏ கைது செய்யப்பட்டார்.
லாலு கண்டனம்:
தனியார் தொலைக்காட்சி நிருபரை தாக்கியவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். ரேஷ்மா என்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பீகாரில் வரும் வெள்ளியன்று (நாளை) ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பாக முழு கடையடைப்பு நடத்தப்படும் என்று லாலு தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications