மாணவியைக் கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
தர்மபுரி: தர்மபுரி அருகே கல்லூரி மாணவியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி அருகேயுள்ள ஒட்டபட்டியை சேர்ந்தவர் அண்ணாமலை. அரசு ஊழியரான இவருக்கு திருமணமாகி மகள் இருக்கிறார்.
அண்ணாமலையின் மகள் அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். சம்பவத்தன்று காலையில் வழக்கம்போல் பாலிடெக்னிக் கிளம்பி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
இதனால் பெற்றோர் மகளை காணாமல் பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இரவு 7 மணிக்கு அண்ணாமலையின் வீட்டுக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசிய நபர், உங்கள் மகளை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவர் உயிருடன் வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த அண்ணாமலை இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் கடத்தப்பட்ட மாணவியை தீவிரமாக தேடிவருவதுடன், தொலைபேசி எங்கிருந்து வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications