கிருஷ்ணசாமி தாக்குதல்: ஐஏஎஸ் அதிகாரி விசாரணை தொடக்கம்
மதுரை: காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மீதான தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பரூக்கி தனது விசாரணையை இன்று தொடங்குகிறார்.
காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கடந்த 29ம் தேதி முதுகுளத்தூர் அருகே கீழ் கண்ணிச்சேரி என்ற இடத்தில் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். வேல் கம்பால் அவர் தாக்கப்பட்டதில், பலத்த காயமடைந்தார்.
மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கிருஷ்ணசாமி தற்போது ஓரளவு தேறியுள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணசாமி தாக்குதல் தொடர்பாக விசாரிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி பரூக்கியை தமிழக அரசு நியமித்துள்ளது. பரூக்கி வருவாய் நிர்வாக ஆணையராக உள்ளார்.
தனது விசாரணை அறிக்கையை அரசிடம் 15 நாட்களுக்குள் பரூக்கி தாக்கல் செய்வார்.
முதுகுளத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திற்கு காவல்துறையிடம் முறையாக அனுமதி வாங்கப்பட்டிருந்ததா, கிருஷ்ணசாமி பயணம் செய்த சாலையில் அவர் வருவது குறித்து காவல்துறையினருக்கு முன்பே உரிய முறையில் தெரிவிக்கப்பட்டிருந்ததா, பாதுகாப்பில் குளறுபடி இருந்ததா என்பது உள்ளிட்டவை குறித்து பரூக்கி விசாரணை மேற்கொள்வார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications