நக்சலைட்டுகள் தாக்குதலில் 15 போலீஸார் பலி
ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 15 போலீஸார் கொல்லப்பட்டனர்.
சட்டீஸ்கர் மாநிலம் பீஜப்பூர் மாவட்டத்தில், பாமேட் காவல் நிலையத்தைச் சேர்ந்த 17 போலீஸார் நக்சலைட் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவர்கள் மீது திடீரென நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். மேலும் கண்ணிவெடியையும் வெடிக்கச் செய்தனர். இதில் 15 போலீஸார் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
2 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினர். அவர்களில் ஒருவர்தான் இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார்.
இதில் கொடுமை என்னவென்றால் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் அமைந்துள்ள பாமேட் காவல் நிலையத்தில் தொலைபேசி வசதி கூட கிடையாது என்பதுதான்.
கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஏட்டு. 12 பேர் பாமேட் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள். மற்ற இருவரும் சட்டீஸ்கர் ஆயுதப் படை போலீஸார் ஆவர்.












Click it and Unblock the Notifications