காங்கிரஸில் இணைந்த சிவகங்கை நகராட்சித் தலைவர்
சிவகங்கை: திமுகவில் சீட் கிடைக்காமல் சுயேச்சையாகப் போட்டியிட்டு, தற்போது சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்து வரும் நாகராஜன், மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
சிவகங்கை நகராட்சித் தலைவராக இருந்த முருகன் சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு மூலம் கொல்லப்பட்டார். இதையடுத்து சமீபத்தில் நகராட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. இதில் சுயேச்சை கவுன்சிலரான நாகராஜன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாகராஜன் திமுககாரர். ஆனால் திமுகவில் கவுன்சிலர் சீட் கிடைக்காததால் சுயேச்சையாகப் போட்டியிட்டு, போட்டியின்றி வெற்றி பெற்றவர். தற்போது நகராட்சித் தலைவராகவும் உயர்ந்துள்ளார்.
இந்த நிலையில், நாகராஜன் திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில் நாகராஜன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நிழ்ச்சியில், ப.சிதம்பரம் பேசுகையில், 2011ம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் இப்போதிருந்தே காங்கிரஸ் கட்சி முனைப்புடன் செயலாற்ற வேண்டும். கட்சியில் நிறைய இளைஞர்களை சேர்க்க வேண்டும். அடிமட்ட அளவிலிருந்து கட்சியைப் பலப்படுத்த வேண்டும்.
ஆள் மாறாட்டம் காரணமாக தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படியே இருந்தாலும் கூட இந்த சம்பவத்தை போலீஸார் தீவிரமாக விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்றார் சிதம்பரம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications