கன்னியாகுமரி ரப்பர் தொழிற்சாலைக்கு நிலம் ஆர்ஜிதம்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் அமையவுள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு நில ஆர்ஜிதம் பணிகள் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் முடிவடையும் என்று தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் தெரிவித்தார்.
சட்டம், நீதி மேம்பாட்டு சங்கம், காந்தி காமராஜர் ராஜீவ் தேசிய கூட்டமைப்பு, மத்திய அரசின் ரப்பர் வாரிய கழகம் ஆகியவற்றின் வழிகாட்டுதல் முலம் ரப்பர் பொருள் உற்பத்தி கருத்தரங்கு நாகர்கோவில் புன்னைநகரில் நடைபெற்றது. ரப்பர் வல்லுனர் அலேக்சாண்டர் வரவேற்றார்.
அமைச்சர் சுரேஷ் ராஜன் கருத்தரங்கை தொடங்கி வைத்த பின்னர் பேசியதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, நெல், வாழை, ரப்பர் சாகுபடி நல்ல நிலையில் நடந்து வருகிறது. நாட்டில் முதல் தரமான ரப்பர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
1996 முதல் 2001 வரை திமுக ஆட்சி இருந்தபோது உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, படித்த இளைஞர்கள் வேலையில்லாததால் மோதலில் ஈடுபடுகிறார்கள். அதை தவிர்க்க தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும் என்ற கருத்தை தெரிவித்திருந்தது.
அந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க திமுக அரசு முடிவு செய்தது. அதன்படி நாங்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆனால் அதன்பின் வந்த அதிமுக அரசு நாங்குநேரி தொழில் நுட்ப பூங்கா உள்பட அனைத்து திட்டங்களையும் கைவிட்டு விட்டது. தற்போது மீண்டும் திமுக அரசு அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
குமரி மாவட்டத்தில் செண்பகராமன் புதூரில் ரப்பர் தொழிற்சாலை தொடங்க 240 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 170 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அதை சமப்படுத்தி மேம்படுத்தும் பணி நடந்து வருகிறது. டிசம்பர் 15க்குள் அங்கு முதற்கட்ட பணிகள் முடிவடையும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications