பிரதீபா முன் பாஜக - ம.ஜ.தள எம்.எல்.ஏக்கள் இன்று 'பரேட்'
டெல்லி: கர்நாடக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இன்று மாலை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை சந்தித்து ஆட்சி அமைக்க தங்களுக்கு அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி அவர் முன்பு அணிவகுக்கவுள்ளனர்.
பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏக்கள் நேற்று மாலை பெங்களூரிலிருந்து டெல்லி வந்து சேர்ந்தனர். இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சட்டசபை பாஜக தலைவர் பி.எஸ்.எட்டியூரப்பா சந்தித்தார்.
அப்போது கூறுகையில், சட்டசபையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆட்சி அமைக்க பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் பலம் போதுமானது.
அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆளுநரிடம் நேரில் போய் தங்களது ஆதரவைத் தெரிவித்தோம். இருப்பினும் இதுவரை எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்கவே இல்லை. இதனால்தான் குடியரசுத் தலைவர் முன்பு எங்களது பலத்தைக் காட்ட வந்துள்ளோம் என்றார்.
எட்டியூரப்பாவுடன், மாநில பாஜக தலைவர் சதானந்த கெளடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோரும் சேர்ந்து குடியரசுத் தலைவரை சந்திக்கவுள்ளனர்.
இன்று மாலை 4 மணிக்கு இரு கட்சிகளின் எம்.எல்.ஏக்களும் குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கர்நாடக ஆளுநர்:
இதற்கிடையே, டெல்லி வந்துள்ள கர்நாடக ஆளுநர் ராமேஷ்வர் தாக்கூர், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. அப்போது கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை












Click it and Unblock the Notifications