துபாயில் தமிழ் முஸ்லீம்கள் சங்கத்தின் ரத்ததான முகாம்
துபாய்: துபாயில் தமிழ் முஸ்லீம் சங்கத்தின் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற உள்ளது.
9ம் தேதி காலை 9 மணிக்கு ஜமாஅத்து தவ்ஹீத் அமைப்பின் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் நடத்தப்பட உள்ளது.
இந்த ரத்ததான முகாமில் அனைவரும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரத்ததானம் நடக்கும் பகுதிகளிலும், தமிழர்கள் அதிகம் இருக்கும் இடங்களிலும் அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் இந்த ரத்ததான முகாமிற்காக அன்றைய தினம் காலை 8 மணிக்கு துபாய் சத்வா பேருந்து நிலையம் ஸ்டீவ் பள்ளியிலிருந்து சிறப்பு வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தங்கள் பெயரை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யுமாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
050-5723069
050-5756518
050-4658603












Click it and Unblock the Notifications