இலங்கை கடற்படைக்கு அமெரிக்க ரேடார்கள்
கொழும்பு: இலங்கை கடற்படைக்கு அமெரிக்கா ரேடார்களை வழங்கியுள்ளது.
இதன்மூலம் கடல் பகுதியில் கண்காணிப்பை இலங்கை கடற்படை தீவிரமாக்க முடியும்.
திரிகோணமலை கடற்படைத் தளத்தின் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ராபர்ட் ஓ பிளேக் இந்த ரேடார் கருவிகளையும், நவீன ரக படகுகளையும் வழஙகினார்.
இலங்கை கடற்படையின் கமாண்டரான வைஸ் அட்மிரல் வசந்தா கரன்னகொடா இவற்றைப் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பிளேக், அமெரிக்காவால் 1977ம் ஆண்டில் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட எல்டிடிஈ இயக்கத்தின் ஆயுதக் கடத்தலைக் கட்டுப்படுத்த இந்தக் கருவிகள் உதவும் என்றார்.
இது தொடர்பாக அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உலகளவில் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தின் அடிப்படையின் இவை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு முயல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
போலீஸ்காரர் சுட்டு கொலை:
இதற்கிடையே இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் காவலர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இலங்கை தேசிய பட்ஜெட் 2 நாட்களுக்கு முன்புதான் நாடாளுமன்றத்தில் அதிபர் ராஜபக்சேவால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு பலத்த பாதுகாப்பு மிக்க நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
துப்பாக்கிக் குண்டுகளுடன் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த போலீஸ்காரரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இது தற்கொலையா அல்லது யாரேனும் சுட்டுக் கொன்று விட்டனரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications