ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயி கொலை: பதட்டம், போக்குவரத்து நிறுத்தம்
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே முன் விரோதத்தில் விவசாயி குத்திக் கொல்லப்பட்டார். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாபட்டி கிராமத்தில் உள்ள கீழத்தெரு, இமானுவேல் தெருவில் இரு பிரிவினர் வசித்து வருகின்றனர். இவர்களிடையே அடிக்கடி முன்விரோதம் தொடர்பாக மோதல் மூளும்.
நேற்று மாலை கீழத்தெருவை சேர்ந்த ரமணி (வயது35) இமானுவேல் தெருவை சேர்ந்த விவசாயி செல்லத்துரை (30) ஆகியோர் அங்கு உள்ள டீக் கடைக்கு சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ரமணி கத்தியால் செல்லத்துரையை சரமாரியாக குத்தினார். இதில் செல்லத்துரை ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதை அறிந்ததும் இமானுவேல் தெருவில் வசிப்பவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர்.
தகவல் அறிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சாகுல் அமீது தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அமைதிப்படுத்தினர்.
ஆனாலும் கொலையுண்ட செல்லத்துரையின் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். செல்லத்துரையின் உடல் வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அங்கு செல்லத்துரையின் உறவினர்கள் முற்றுகையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோஷம் போட்டனர்.
இதையடுத்து ரமணி கைது செய்யப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து பதட்டம் நிலவுவதால் அங்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications