கள்ளக் காதல்-மனைவியைக் கொன்ற கணவன்
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி: தர்மபுரி அருகே கள்ளக் காதல் விவகாரத்தில் பெண் வெட்டிக் கொல்லப்பட்டார்.
தர்மபுரியை அடுத்த முத்தல்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அய்யாசாமி. விவசாயியான இவரது மனைவி மல்லிகா (வயது 35).
மல்லிகாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இன்னொருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அய்யாச்சாமி தோட்டத்திற்கு வேலைக்குப் போன பின்னர் மல்லிகாவும், அவரது கள்ளக்காதலரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இது அய்யாச்சாமிக்குத் தெரிய வரவே கள்ளக் காதலை விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் மல்லிகா அதைக் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து ஆத்திரமடைந்த அய்யாச்சாமி, மல்லிகாவை அரிவாளால் வெட்டினார்.
படுகாயமடைந்த மல்லிகா தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
போலீஸார் அய்யாசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications