தேவர் சிலை உடைப்பு: முடிவு தெரியாமல் ஊர் திரும்ப மாட்டேன்-கார்த்திக்
திருநெல்வேலி: வேலாயுதபுரத்தில் தேவர் சிலை உடைக்கப்பட்டது தொடர்பான பிரச்சனைக்கு இறுதியான ஒரு முடிவு தெரியாமல் நான் திரும்ப மாட்டேன் என்று பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள வேலாயுதபுரத்தில் கடந்த 4ம் தேதி யாரோ சில சமூக விரோதிகள் அங்குள்ள தேவர் சிலை உடைத்து சேதப்படுத்தி விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட தேவர் சிலையை பார்க்க நடிகர் கார்த்திக் நேற்று நெல்லை வந்தார். அவர் அங்கிருந்து வேலாயுதபுரம் புறப்படும் நேரத்தில் நெல்லை மாவட்ட போலீசார் கார்த்திக்கை வேலாயுதபுரம் செல்ல தடை விதித்தனர்.
போலீஸ் தடை விதித்தாலும் கார்த்திக் சென்னை திரும்பாமல் நெல்லையில் உள்ள தனியார் விடுதியிலேயே தங்கியுள்ளார்.
அவரைக் காண திரண்ட தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது,
நான் என்ன நோக்கத்திற்காக வந்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த நோக்கம் கண்டிப்பாக நிறைவேறும். தற்போதைய பிரச்சனைக்கு போராட்டங்கள் மூலம் தீர்வு கிடைக்காது.
நம்மால் பொதுமக்களுக்கு எந்த வகையிலும் இடையூறுகள் ஏற்படக்கூடாது. இந்த பிரச்சனைக்கு இறுதியான ஒரு முடிவு தெரியாமல் நான் ஊர் திரும்ப மாட்டேன். அதற்காக தான் நான் இங்கு முகாமிட்டுள்ளேன் என்றார் கார்த்திக்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications