4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய் திரும்பி வந்த மலைப்பாம்பு
சென்னை: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலைப்பாம்பு திரும்பி வந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அருகே உள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு நேற்று மாலை ஒரு பெரிய மலைப்பாம்பு மரம் ஒன்றைச் சுற்றி ஊர்வதை பார்வையாளர்களும், பூங்கா ஊழியர்களும் பார்த்தனர்.
இதையடுத்து அந்தப் பாம்பைப் பிடிக்க திருநாவுக்கரசு, மோகன் ஆகிய இரு பூங்கா ஊழியர்களும் முயன்றனர். ஆனால் திருநாவுக்கரசுவை பாம்பு கடித்தது. இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இருவரும் சேர்ந்து பாம்பைப் பிடித்தனர்.
பின்னர் திருநாவுக்கரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிடிபட்ட அந்தப் பாம்புக்குப் பின்னால் ஒரு கதையே உள்ளது. இந்த பாம்பு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு குட்டியாக இருந்தபோது காணாமல் போய் விட்டதாம். அதைப் பிடிக்க பலமுறை முயன்றும் கூட கண்ணில் சிக்காமல் இருந்து வந்தது.
காணாமல் போன அந்தப் பாம்பு பூங்காவுக்கு அருகே உள்ள காட்டுக்குள் இருந்திருக்கிறது. இப்போது வளர்ந்து ஆளான பின்னர் மீண்டும் பூங்காவுக்குள் வந்தபோது மாட்டிக் கொண்டதாம்.
இது மலேசிய ரெட்டிக்குலேட்டட் வகையைச் சேர்ந்த பாம்பாகும். இதன் உடல் முழுவதும் பட்டை பட்டையாக வளையம் போல இருக்கும். அதிக நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலைப்பாம்பினால் பூங்காவில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications