ஜெ. வீட்டருகே பிடிபட்டவர் மன நோயாளி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டு அருகே நடமாடிய மன நோயாளியை போலீஸார் பிடித்து அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் அருகே அடிக்கடி மர்ம நபர்கள் சிக்கி வருவதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இதுவரை நான்கு மர்ம நபர்கள் ஜெயலலிதா வீட்டின் அருகே பிடிபட்டுள்ளனர். இதில் ஜோஷ்வா என்ற நபர் ஒரே ஆண்டில் இருமுறை ஜெயலலிதா வீட்டுக்கு மர்மமான முறையில் வந்து பிடிபட்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று மீண்டும் ஒரு மர்ம நபர் ஜெயலலிதா வீட்டுக்கு அருகே நடமாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாலை இந்த நபர் ஜெயலலிதா வீடு உள்ள பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த போலீஸார் விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக அவர் பேசினார். பின்னர் தனது பெயர் பார்த்தசாரதி என்றும், தாம்பரத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
அவர் கூறிய முகவரியைத் தொடர்பு கொண்ட போலீஸார் குடும்பத்தினரை வரவழைத்தனர். குடும்பத்தினர் விைரந்து வந்து அவர் மனநோயாளி என்றும், பலத்த பாதுகாப்புடன் வீட்டில் இருந்த அவர் எப்படியோ தப்பி வந்து விட்டதாகவும், கூறினர்.
இதையடுத்து பார்த்தசாரதியை போலீஸார் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். பார்த்தசாரதி மன நோயாளி என்று போலீஸாரிடம் அவருடைய குடும்பத்தினர் எழுதிக் கொடுத்து விட்டு அழைத்துச் சென்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications