செஞ்சியில் தேமுதிக பேனர்கள் கிழிப்பு: நள்ளிரவில் மறியல், பரபரப்பு
செஞ்சி: செஞ்சியில் வைக்கப்பட்டிருந்த தேமுதிகவினரின் பேனர்கள், போஸ்டர்களை யாரோ சில விஷமிகள் கிழித்தெறிந்ததை தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் நள்ளிரவில் சாலை மறியல் செய்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சியில் தேமுதிக செயலாளரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொள்ளவிருந்தார். அதற்காக அக்கட்சி தொண்டர்கள் நகர் முழுவதும் பேனர்கள், போஸ்டர்கள் வைத்திருந்தனர்.
செஞ்சி பேருந்து நிலைத்தில் வைத்திருந்த தேமுதிக பேனர்களை நேற்றிரவு யாரோ சில மர்ம நபர்கள் கிழித்தெறிந்து விட்டனர்.
இதனையறிந்த தேமுதிகவின் ஒன்று திரண்டு பேனரை கிழிக்கப்பட்டது கண்டித்து நள்ளிரவு 12 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டதால் செஞ்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பேனரை கிழித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது. 30 நிமிடம் நடந்த இந்த மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சாலை மறியல் செய்த செஞ்சி நகர தேமுதிக செயலாளர் பழனி மற்றும் தொண்டர்கள் ராமு, அமீர் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் மீது தேமுதிகவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தேமுதிக பேனரை கிழித்தவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று தேமுதிகவினர் கூறினர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications