ஜெ. வீட்டருகே கண்காணிப்பு-சோதனை அதிகரிப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்கு அடிக்கடி மர்ம நபர்கள் வந்து பெரும் தலைவலியாகியுள்ளதால், ஜெயலலிதாவின் வீடு உள்ள தெருவில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். அந்த வழியாக செல்லும் அனைவரையும் நிறுத்தி விசாரித்து விட்டுத்தான் அனுப்புகின்றனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் வீடு போயஸ் தோட்டம் பகுதியில் உள்ளது. இதே பகுதியில்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் வீடும் உள்ளது.
சமீப காலமாக ஜெயலலிதாவின் வீட்டுக்கு சில மர்ம நபர்கள் அடிக்கடி வந்து பரபரப்பை ஏற்படுத்தினர். அதிலும் ஜோஷ்வா என்ற நபர் ஒரே ஆண்டில் இருமுறை வந்து சலசலப்பை ஏற்படுத்தினார்.
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைக்கப்பட்டதால்தான் இந்த நிலை என்று ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் முதல்வர் கருணாநிதி இதை மறுத்துள்ளார். ஜெயலலிதாவுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கியுள்ளார். சென்னை மாநகர காவல்துறையும், தமிழக அரசும் கூட ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமாக தெரிவித்துள்ளன.
கடந்த சில நாட்களில் மட்டும் 4 மர்ம நபர்கள் ஜெயலலிதா வீட்டுக்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்து போனதால் சர்ச்சை பெரிதாகியுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதா வீடு உள்ள பகுதியில் போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ஜெயலலிதாவின் வீட்டிலிருந்து 150 மீட்டர் தூரத்திலேயே போலீஸார் குவிக்கப்பட்டு அந்தப் பகுதி வழியாக வருவோர் மற்றும் வாகனங்களை நிறுத்தி போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதன் மூலம் ஜெயலலிதாவின் வீட்டுக்கு மர்ம நபர்களோ, வாகனங்களோ செல்லாமல் தடுக்க முடியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். நேற்று தொடங்கியுள்ள இந்த சோதனை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications