வாக்காளர் பட்டியலில் மாணவர்கள்!
சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக கல்லூரிகளுக்கு வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்களை அனுப்ப தேர்தல் ஆணையம் முடிவு ெசய்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி தொடங்கவுள்ளது. இந்தப் பணியின் ஒரு கட்டமாக 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்கள் அனைவரையும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.
அதன்படி அனைத்துக் கல்லூரிகளுக்கும் வாக்காளர் பெயர் சேர்ப்பு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படும். 18 வயது நிரம்பிய மாணவர்கள் தங்களது விவரங்களையும், புகைப்படங்களையும் இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கலாம்.
இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில், புதிதாக பெயர்களை சேர்ப்பதற்கு வசதியாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி செய்யப்படுகிறது.
தேர்தல் கமிஷனின் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் இ-மெயில் செய்தால், பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அந்த விண்ணப்பத்தில் அலுவலர்கள் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக்கு சென்று கையெழுத்துப் பெற்றுச் செல்வர். பின்னர், பட்டியலில் பெயர் சேர்க்கப்படும்.
தனது மாணவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவா பெண்கள் கல்லுாரி சிறப்பு முயற்சி எடுக்கவுள்ளது.
18 வயது நிரம்பிய மாணவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக பெற்றுத் தரும் பணியை இக்கல்லூரி மாணவிகள் செய்வர்.
இதற்காக, சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளின் முகவரி, தொலைபேசி மற்றும் பேக்ஸ் எண்கள் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இருந்து பெற உள்ளனர் என்றார் நரேஷ்குப்தா.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications