கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 13 கைதிகள் அப்பீல்
சென்னை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மேல் முறையீடு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 60-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இது தொடர்பாக 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.
இந்த வழக்கு விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்ட 8 பேர் முதலில் விடுதலை செய்யப்பட்டனர்.
அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா உள்ளிட்ட 43 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் சிலருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டன.
அபுதாகீர், அப்பாஸ், இப்ராகிம் அப்துல் ரகுமான், அஷ்ரப், சாகுல் அமீது, முகமது ரபீக், அப்துல் வகாப், அப்துல் கரீம், அப்துல் பாரூக், சர்தாஜ், ஜாகீர், பக்ரூதீன் அலி அகமது ஆகிய 13 பேருக்கு தலா 13 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
தற்போது 13 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களது மனுவில், நாங்கள் 10 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டோம். எனவே எங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இந்த மனு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பன் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள், 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு கோவை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications