கஸ்டம்ஸ் அலுவலகத்தில் பறிமுதல் வைரங்கள் கொள்ளை-மதிப்பு ரூ. 1 கோடி: சிபிஐ விசாரணை
சென்னை: பறிமுதல் செய்யப்பட்டு சென்னையில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள கடத்தல் வைரங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றது.
சென்னை ராஜாஜி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சுங்க இலாகா அலுவலகம் உள்ளது. வெளிநாடுகளிலிருந்து முறைகேடாக கடத்தி வரப்படும் தங்கம், வைரம் உட்பட விலைமதிப்புள்ள பொருட்கள், அது தொடர்பான வழக்குகள் முடியும் வரை இங்குதான் பாதுகாத்து வைக்கப்படும்.
வழக்கில் கடத்தல்காரர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு, அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் இந்த தங்கம், வைரம் போன்றவை ஏலத்தில் விடப்படும்.
கடந்த 1990ம் ஆண்டு விமானத்தில் வந்த ஒரு பயணி கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள வைர நகைகள் 2 கவர்களில் இங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இந்த வழக்கில் கடத்தல் ஆசாமிக்கு எதிராகவும், அரசுக்கு சாதகமாகவும் தீர்ப்பு வந்தது.
இதையடுத்து இந்த வைரங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. ஏலத்திற்காக கண்காட்சியில் வைப்பதற்கு முன் நகை மதிப்பீட்டாளர்கள் அதை மதிப்பீடு செய்வது வழக்கம்.
சில மாதங்களுக்கு முன் இந்த அலுவலகத்தில் தங்கம் மற்றும் வைர நகைகளை மதிப்பிடும் குழு ஆய்வு செய்தது. அப்போது 2 பாலிதீன் கவர்களில் வைக்கப்பட்டிருந்த வைரங்களுக்கு பதிலாக மெருகூட்டப்பட்ட செயற்கை வைரங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில் சுங்கத் துறையில் பணியாற்றுவோருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் சிபிஐயிடம் புகார் தரப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
திருடப்ட்ட வைரங்களின் மதிப்பு ரூ.1 கோடி. அதை மாற்றிவிட்டு சந்தேகம் ஏற்படாமல் இருக்க அதேபோன்று பாலீஷ் செய்யப்பட்ட அமெரிக்கன் செயற்கை வைரங்களை வைத்துள்ளனர். இந்த வைரங்களின் மதிப்பு சில லட்சம் மட்டுமே என்றார்.
கடந்த 1990ம் ஆண்டு இந்த பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட இந்த வைரங்கள் 2003ம் ஆண்டு மதிப்பிடும் குழுவால் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஒரிஜினல் வைரங்கள் இருந்துள்ளன.
கடந்த மார்ச் மாதம் தான் இவை திருடப்பட்டுள்ளன என சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளதாம். விரைவில் ஆளை அமுக்குவோம் என்கிறது சிபிஐ.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications