பிற்பட்டோர் இட ஒதுக்கீடு-டெல்லியில் ராமதாஸ் நாளை ஆர்ப்பாட்டம்
டெல்லி: மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை முழு அளவில் அமலாக்கக் கோரி பாமக சார்பில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நாளை டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து பாமக எம்பிக்களான மூர்த்தி, ராமதாஸ், பொன்னுசாமி, செந்தில், தன்ராஜ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு என்பது 5.3 சதவீதம் அளவே உள்ளது. மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு பிறகும் கூட மத்திய அரசுப் பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான பல இடங்கள் காலியாகவே உள்ளன.
இந்த இடங்களை சில சமூக நீதிக்கு எதிரான சக்திகள் நிரப்ப மறுத்து காலியாக வைத்துள்ளன.
இப்பிரச்னையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) ஜந்தர் மந்தர் பகுதியில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், பீகார் மற்றும் உபி ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர் நல அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர் என்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications