பிற்பட்ட-சிறுபான்மை சமூக மாணவிகளுக்கு இலவச ஏர்-ஹோஸ்டஸ் பயிற்சி
சென்னை: தாழ்த்தப்பட்ட மாணவிகளைத் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கும் இலவச விமானப் பணிப் பெண்கள் பயிற்சியளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு வெற்றிகரமாக ஏர்-ஹோஸ்டஸ் பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியில் தேறிய பெரும்பாலான மாணவிகளுக்கு வேலை வாய்ப்பையும் அரசு பெற்றுத் தந்தது.
இந் நிலையில் இத் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையின மாணவிகளுக்கும் அரசு விரிவாக்கவுள்ளது.
முதல் கட்டமாக இந்தப் பிரிவுகளைச் சேர்ந்த 200 மாணவிகளுக்கு பயிற்சி தரப்படும். இதற்காக ரூ. 1.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
இது தவிர பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூக மாணவ-மாணவிகளுக்கு ரூ. 10 கோடி செலவில் பிற 40 வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகளும் தொடங்கப்படும் என்றார்.
2007-08ம் ஆண்டில் பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்தின் சார்பில் 15,000 பேருக்கு ரூ. 14 கோடி கடனுதவியும், சிறுபான்மையினர் பொருளாதார நல வாரியத்தின் சார்பில் 5,000 பேருக்கு ரூ. 9 கோடி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications