கம்யூனிஸ்ட் தலைவர் வரதராஜன் மருத்துவமனையில் அனுமதி
திண்டுக்கல்: மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட வரதராஜன் நேற்றிரவு திண்டுக்கல்லுக்கு சென்றார். இன்று காலை தூங்கி எழுந்தவுடன் அவருக்கு வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.
இதனால் சோர்வுடன் இருந்த அவரை கட்சி தொண்டர்கள் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால் தான் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டதாக கூறினர்.
பின்னர் டாக்டர்கள் சிகிச்சை அளித்த பின்னர் வழக்கம் போல் உணவு சாப்பிட்டார். மேல் சிகிச்சை பெறுவதற்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக மார்க்சிஸ்ட் கட்சியின் கூட்டங்களில் ஓய்வில்லாமல் கலந்து கொண்டதால் தான் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என்று கட்சி தொண்டர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications