போலீஸ் விசாரணையில் இறந்த பாமக பிரமுகர் குடும்பத்துக்கு அரசு ரூ.1 லட்சம் நிதியுதவி
சென்னை: போலீஸ் விசாரணையில் இறந்த பாமக பிரமுகர் ராமலிங்கத்தின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்க்கும் இவர் கடந்த 20ம் தேதி குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தின் வெளியே மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரை போலீசார் தான் விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்றுவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இச் சம்பவத்தால் கடலூரில் பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து சம்பவம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனார்தனம் நியமிக்கப்பட்டார்.
இந் நிலையில் பாமக எம்.எல்.ஏ வேல்முருகன் இன்று தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து இந்தச் சாவு குறித்த பாமகவின் அறிக்கையை அளித்தார்.
இதையடுத்து ராமலிங்கத்தின் குடும்பத்தாருக்கு உடனடியாக ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்க முதல்வர் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications