சோனியா-ராகுலிடம் நேரில் புகார் செய்வேன்: மயூரா
சென்னை: என்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடமும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியிடமும் நேரில் சந்தித்து புகார் செய்வேன் என்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிலரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டார். இது தொடர்பாக கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந் நிலையில் மயூரா கூறுகையில்,
சத்தியமூர்த்தி பவனில் நடந்த கொலை வெறி தாக்குதலுக்கு யார் காரணம் என்பது காங்கிரஸ் தொண்டர்களுக்கு தெரியும்.
கட்சி மேலிடம் நியமித்த 3 பேர் குழுவும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியதில் தனது அறிக்கையை தாக்கல் செய்திருக்கும். கட்சி மேலிடம் தெளிவாக இருக்கிறது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டது.
இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பட்டினப்பாக்கம் பிரபு கைது செய்யப்பட்டால் இன்னும் பல உண்மைகள் வெளிவரும். தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். சத்தியமூர்த்தி பவனில் நடந்த சம்பவம் மக்கள் மத்தியில் ஒரு தலை குனிவுதான்.
தவறு செய்தவர்கள் சட்டரீதியாகவும், இயக்கரீதியாகவும் தண்டிக்கப்படுவார்கள்.
வரும் 27 அல்லது 28ம் தேதி நான் டெல்லி சென்று சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் மற்றும் பின்னணி பற்றி புகார் செய்வேன் என்றார் மயூரா ஜெயக்குமார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications