இந்தியாவுக்கு வரும் பஹ்ரைன் ஏர் விமான சேவை
துபாய்: பஹ்ரைன் நாட்டின் முதல் தனியார், குறைந்த கட்டண விமான நிறுவனமான பஹ்ரைன் ஏர், ஜனவரி 17ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது. இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் தனது சேவையை அது மேற்கொள்ளவுள்ளது.
தனியாரால் தொடங்கப்படும் பஹ்ரைன் ஏர் நிறுவனம், பஹ்ரைனின் முதலாவது தனியார், குறைந்த கட்டண விமான நிறுவனமாகும். ஜனவரி 17ம் தேதி முதல் இந்த நிறுவனம் தனது சேவையை தொடங்குகிறது.
முதல் கட்டமாக துபாய், மஷாத், பெய்ரூட், அலெக்சாண்ட்ரா ஆகிய நகரங்களுக்கு இந்த நிறுவனத்தின் விமானங்கள் பறக்கவுள்ளன. அதன் பின்னர் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியத் துணைக் கண்டத்திற்கும் சேவை விரிவுபடுத்தப்படும்.
மேலும் பஹ்ரைன் சர்வதேச விமான நிலையத்தை, மிகப் பெரிய விமான மையமாக மாற்றவும் பஹ்ரைன் ஏர் பாடுபடும். பஹ்ரைனில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இந்த நிறுவனம் முயற்சிக்கும் என்று இந்த நிறுவனத்தின் தலைவர் ஷேக் முகம்மது பின் அப்துல்லா அல் கலிபா கூறியுள்ளார்.
தொடக்கத்தில் வளைகுடா பிராந்தியத்தில் 13 நகரங்களில் தினசரி 140 விமான சேவையுடன் இந்த நிறுவனம் செயல்படும்.
பஹ்ரைன் மற்றும் சவூதியைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள் சிலரின் கூட்டு பங்களிப்புடன் இந்த விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.
பஹ்ரைனில் மாதந்தோறும் 10 ஆயிரம் பயணிகள், குறைந்த கட்டண விமானங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களை தங்களது டார்கெட் ஆக பஹ்ரைன் ஏர் குறி வைத்து களம் இறங்குகிறது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் பஹ்ரைன் ஏர் 14 விமானங்களை வாங்கவுள்ளது. 2009ம் ஆண்டுக்குள் 23 விமானங்களாகவும், 2010ம் ஆண்டுக்குள் அதை 25 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விமானத்திற்கான டிக்கெட் முன்பதிவு டிசம்பர் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. துபாய், பெய்ரூட், மஷாத், அலெக்சாண்ட்ரா ஆகிய நகரங்களுக்கான டிக்கெட் முன்பதிவை அன்று முதல் மேற்கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications