ஷெரீப் நாளை நாடு திரும்புகிறார்: மனைவி
இஸ்லாமாபாத்: இருமுறை பாகிஸ்தானிலிருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், சவூதியிலிருந்து நாளை மாலை நாடு திரும்பவுள்ளதாக அவரது மனைவி குல்சூம் நவாஸ் கூறியுள்ளார்.
முஷாரப் ராணுவப் புரட்சியின் மூலம் நவாஸ்ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து அதிபர் பதவிக்கு வந்ததும், சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் ஷெரீப். அதன் பின்னர் எட்டு ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் சமீபத்தில் நாடு திரும்பினார்.
ஆனால் விமான நிலையத்தோடு அவரை நிறுத்திய முஷாரப் அரசு, அங்கிருந்து மீண்டும் சவூதிக்கு நாடு கடத்தி விட்டது.
இந்த நிலையில் இன்னொரு முன்னாள் பிரதமரான பெனாசிர் பூட்டோ சமீபத்தில் நாடு திரும்பினார். அவர் திரும்பிய சில வாரங்களில் பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பல்வேறு அதிரடி சம்பவங்களும் அரங்கேறின.
இந்தச் சூழ்நிலையில் மீண்டும் பாகிஸ்தான் திரும்ப ஷெரீப் முடிவு செய்துள்ளார். அவர் நாளை மாலை பாகிஸ்தான் திரும்புவதாக ஷெரீப்பின் மனைவி குல்சும் கூறியுள்ளார்.
நேற்று நவாஸ் ஷெரீப்புக்கு சவூதி மன்னர் அப்துல்லா, ரியாத் நகரில் இரவு விருந்து அளித்தார். இந்த விருந்துக்குப் பின்னர் சவூதியிலிருந்து ஷெரீப் பாகிஸ்தான் கிளம்பவுள்ளதாக அவரது மனைவி தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தத் தகவலை உறுதி செய்து ஷெரீப்பின் தம்பி சபாஷ் ஷெரீப், லண்டன் டிவி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
நாளை ஜெட்டாவுக்கு தனது கணவருடன் செல்வதாகவும், அங்கிருந்து பாகிஸ்தானுக்கு திரும்பவுள்ளதாகவும் குல்சும் கூறியுள்ளார்.
ஷெரீப் மீண்டும் பாகிஸ்தான் திரும்புவதாக வெளியாகியுள்ள தகவலால் பாகிஸ்தானில் மறுபடியும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications