மயூரா ஜெயக்குமார் தாக்குதல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
சென்னை: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, சத்தியமூர்த்தி பவனில் கடந்த 11ம் தேதி மர்ம கும்பல் ஒன்று அதிரடியாக நுழைந்து தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெயக்குமாரை அரிவாளால் வெட்டியது.
இந்த சம்பவத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் எம்.எல்.ஏ. உட்பட 19 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இதில் காங்கிரஸ் கவுன்சிலர் சைதை வில்லியம்ஸ், மோகன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள விஷ்ணுபிரசாத் 2 வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.
இந்த நிலையில் தனிப்படையினர் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், மேலும் ஒருவர் சிக்கியுள்ளார். அவரது பெயர் ஸ்ரீகண்டன் என்கிற கோடம்பாக்கம் ஸ்ரீ (35).
ஸ்ரீ, தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். கைது செய்யப்பட்ட இவரை தனிப்படை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதனையடுத்து ஸ்ரீ புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரத்தில் விஷ்ணுபிரசாத் மீது எந்தத் தவறும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் 3 நபர் விசாரணைக் குழு ஏற்கனவே கூறி விட்டது நினைவிருக்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications