கல்வி: திருச்சி மாவட்டத்திற்கு ரூ.17.76 கோடி ஒதுக்கீடு
திருச்சி: சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு தமிழக அரசு ரூ.17.76 கோடி ஒதுக்கியுள்ளது என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
திருச்சி அருகே மண்ணுடையன்பட்டி என்ற கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அவர் பேசியதாவது,
திருச்சி மாவட்டத்தில் 132 அரசு பள்ளிகளின் கட்டடங்கள் ரூ.5.30 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகின்றன. இது தவிர மேலும் 17 பள்ளிகளின் கட்டடங்கள் ரூ.1.20 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளன.
இந்த மாவட்டத்திற்கு மட்டும் சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கு அரசு ரூ.17.76 கோடியை கல்விக்காக ஒதுக்கியுள்ளது என்றார்.
பின்னர் வளநாட்டில் இலவச கலர் டிவி மற்றும் இணைப்புடன் கூடிய சமையல் எரிவாயு அடுப்புகள் வழங்கும் விழாவில் பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் இதுவரை 78,094 குடும்பங்களுக்கு இலவச கலர் டிவிக்களும், 11,741 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு அடுப்பும்-சிலிண்டெர் இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications