வந்த வழக்கு-வராத அதிமுகவினர்: ஒத்திவைப்பு
மதுரை: மதுரையில் கடந்த வருடம் நடந்த மதுரை மத்தியத் தொகுதி இடைத் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் அதிமுகவினர் ஆஜராகததால் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
மதுரை மத்திய தொகுதியில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது அக்டோபர் 5ம் தேதியன்று அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அவரது ஆதரவாளர்களுடன் கார்களில் வந்து சின்னக்கடை தெருவில் உள்ள திமுக தேர்தல் அலுவலக்தை கட்சி தொண்டர்களுடன் புகுந்து அடித்து நொறுக்கியதாக கூறப்பட்டது.
இந்த தாக்குதல் குறித்து அப்பகுதி திமுக செயலாளர் ராமர் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா, அவரது மகன் சத்யா உட்பட 17 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி வெங்கடேஷ் முன்னிலையில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது ராஜன் செல்லப்பா, சத்யா தவிர மற்ற அனைவரும் ஆஜர் ஆனார்கள். ராஜன் செல்லப்பாவும், அவரது மனும் ஆஜராகதது தொடர்பாக அவர்களின் வக்கீல் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications