காயல்பட்டிணம் நகராட்சித் தலைவர் திடீர் ராஜினாமா
காயல்பட்டிணம்: காயல்பட்டிணம் நகராட்சி கூட்டத்தில் நகராட்சித் தலைவர் திடீரென்று ராஜினாமா கடிதம் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் பாதியில் முடிந்தது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணம் நகராட்சி சாதாரண கூட்டம் நடந்தது. நகராட்சி தலைவர் வாவு செய்யது அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சதகதுல்லா, நிர்வாக அதிகாரி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர்கள் காசிராஜன், கணேசன்பால்ராஜ், ரங்கநாதன் உள்பட பலர் எழுந்து,
ரோடு வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, கிணறுகள் தூர் வாருதல் ஆகிய பணிகள் குறித்து நாங்கள் கொடுத்த கோரிக்கைகளை ஏன் அெஜன்டாவில் சேர்க்கவில்லை.
கடந்த 10 தினங்களுக்கு முன்னர் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியிடம் அனுமதி கேட்டு அவரை சந்திக்க சென்றோம். அப்போது நகராட்சித் தலைவர் வராததால் மத்திய அமைச்சர் எங்களை சந்திக்க மறுத்து விட்டார்.
இதனால் எம்.பி உள்ளுர் மேம்பாட்டு நிதியை வளர்ச்சி பணிகளுக்கு பெற முடியவில்லை என்று குற்றம் சாட்டினர்.
இதனால் ஆத்திரமடைந்த நகராட்சித் தலைவர் வாவு செய்யது அப்துல் ரகுமான் சொந்த காரணங்களுக்காக தனது தலைவர் பதவியை ராஜினமா செய்வதாக கடிதம் எழுதி அதை நிர்வாக அதிகாரி சுந்தரத்திடம் கொடுத்தார். நகராட்சித் தலைவரின் இந்த திடீர் ராஜினாமா முடிவை கவுன்சிலர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து எந்த முடிவும் எடுக்காமல் நகராட்சி கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
நகராட்சித் தலைவரின் ராஜினமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா, இல்லையா என்பது குறித்து எதையும் நிர்வாக அதிகாரி தெரிவிக்கவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications