சென்னை சில்க்சின் ரூ.40 லட்ச சேலை!!

தமிழகத்தின் பல இடங்களில் கிளைகளை நிறுவியுள்ள சென்னை சில்க்ஸ், தங்கம், வைரம், பிளாட்டினம், மரகதம், பவளம் பதித்த பட்டு சேலையை தயாரித்துள்ளது. இந்த சேலையை சென்னையில் சுஹாசினி அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் துணை பொது மேலாளர் கூறுகையில்,
12 வகையான விலை உயர்ந்த ஆபரணங்களை இணைத்து உலகப் புகழ்பெற்ற ரவி வர்மாவின் 11 ஓவியங்களுடன் இந்த சேலையை வடிவமைத்துள்ளோம். இந்த சேலையின் முந்தானை பகுதியில் இந்தியாவின் 11 மாநிலங்களை சேர்ந்த பெண்கள் இசைக் கருவிகளுடன் அணி வகுத்து நிற்கும் ஓவியமும் மற்ற 11 ஓவியங்களுடன் ஒவ்வொரு பார்டரிலும் இடம் பெற்றுள்ளன.
எங்கள் நிறுவனம் இதற்கு முன்னர் 66,794 வண்ணங்களை கொண்ட பட்டு சேலையை அறிமுகப்படுத்தி லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. எங்கள் நோக்கம் இந்த சேலையை தயாரித்ததன் மூலம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிப்பதே.
இந்த சேலையை 30 தலைசிறந்த நெசவாளர்கள் 7 மாதங்களாக உழைத்து இதை தயாரித்துள்ளனர் என்றார்.
இந்த சேலை அறிமுகப்படுத்தும் விழாவில் நடிகை ஷோபனா, நடிகர் ஜீவா, கவிஞர் வைரமுத்து, பின்னணி பாடகி பி.சுசீலா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்போதே இந்த சேலை குறித்து பலரும் ஆர்வத்துடன் விசாரிக்க ஆரம்பித்துவிட்டனராம்.
இந்த சேலைக்கு விரைவிலேயே ஆர்டர்கள் குவியும் என நம்புகிறது சென்னை சில்க்ஸ்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications