பாபர் மசூதி தினம்: தமிழகம் முழுவதும் பலர் கைது
சென்னை: பாபர் மசூதி இடிப்பு தினம் வருவதையொட்டி தமிழகம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படஜ்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிக்கபப்ட்டதன் 15வது ஆண்டு தினம் டிசம்பர் 6ம் தேதி வருகிறது. இதையடுத்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இரவு நேர ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வாகன ரோந்தும் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை நகரில் இரவு பகலாக போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலரைக் கைது செய்து வருகின்றனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6ம் தேதிக்கு இன்னும் 4 நாட்கள் இருந்தாலும்
அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம்.
வரும் 4ம் தேதியிலிருந்து 6ம் தேதி வரை சென்னை நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.
சென்னை மட்டுமில்லாமல் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் அனைத்திலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications