பழனியில் தேமுதிகவினர் பயங்கர கோஷ்டி மோதல்
பழனி: பழனியில் நடந்த தேமுதிக கூட்டத்தில் பயங்கர கோஷ்டி மோதல் மூண்டது. இதில் 8 பேர் காயமடைந்தனர். கார்கள் உடைக்கப்பட்டன, கொடிகள், கொடிக்கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று தேமுதிக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது அங்கு சுந்தரம் என்பவர் வந்தார். இவர் கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டவர்.
மேடையில் இருந்த அவைத் தலைவர் சின்னச்சாமியிடம் சென்ற அவர் கட்சியில் என்னை தொடர்ந்து ஒதுக்கியே வைத்துள்ளீர்கள். இதற்கு என்ன காரணம், எனக்கு நியாயம் வேண்டும் என்றார்.
இதையடுத்து சுந்தரத்திற்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும், சின்னச்சாமிக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்களும் திரண்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இது திடீரென அடிதடியாக மாறியது.
இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர். சேர்களைத் தூக்கி வீசி தாக்கிக் கொண்டனர். பின்னர் இரு தர ப்பினரும் நிகழ்ச்சி நடந்த கல்யாண மண்டபத்திற்கு வெளியே வந்து மோதலில் ஈடுபட்டனர். அங்கிருந்த கார்கள் உடைக்கப்பட்டன. கட்சிக் கொடிகள், கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டன.
அந்த இடமே போர்க்களம் போலக் காணப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும் விலக்கி விட்டனர். பின்னர் பலத்த பாதுகாப்புடன் கூட்டம் தொடர்ந்து நடந்தது.
தாக்குதலில் தேமுதிக கிளைச் செயலாளர் முருகானந்தம், சுந்தரம் உள்ளிட்டோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications