நெல்லை திமுக இளைஞரணி மாநாட்டுக்கு 30 கன்டெய்னர்களில் பூக்கள்!!
நெல்லை: நெல்லையில் நடைபெறவுள்ள திமுக இளைஞரணி மாநாட்டுக்காக 30 கன்டெய்னர்களில் சீனத் தயாரிப்பான பிளாஸ்டிக் வண்ண மலர்க்கொத்துக்கள் வந்திறங்கியுள்ளன.
திருநெல்வேலியில் டிசம்பர் 15, 16ம் தேதிகளில் திமுக இளைஞரணி மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டுக்காக பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெகு மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதில் முக்கியமாக தலைவர்கள் அமர்ந்து பேசும் மேடையில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி வெகு மும்மரமாக நடந்து வருகிறது. மாநாட்டு மேடைக்கு அருகிலேயே முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்குவதற்கென 4 அறைகள் குளிர்சாதன வசதியுடன் தயாராகி வருகிறது.
பந்தலின் வெளிப்புற முகப்பு பணிகள் முடிவடைந்து இனி உள்புறத்தில் அழகு படுத்தப்பட்டு வருகிறது. 300க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இரவு, பகலாக இந்த வேலையை செய்து வருகிறார்கள்.
மேடையை அழகுபடுத்தவும், மேடையை ஒட்டி அமைக்கப்படவுள்ள தர்பார் மண்டபம் முழுவதும் வெல்வெட் துணிகளால் அழகு படுத்தப்படவிருப்பதால், ராஜஸ்தான் மற்றும் ஜெய்ப்பூரிலிருந்து வெல்வெட் துணிகள், சீன தயாரிப்பு வண்ண மலர்கள் ஆகியவை 30 கண்டெய்னர்களில் வந்திறங்கியுள்ளன.
மாநாட்டு பணிகளை பார்ப்பதற்காக நெல்லை மாநகர மக்கள் தினமும் கூட்டம் கூட்டமாக ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்களாம்.
இந்த மாநாட்டில் ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி தருவது குறித்து முதல்வர் கருணாநிதி அறிவிப்பு ெவளியிடலாம் எனப் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications