மலேசியத் தமிழர்களுக்குத் துணையாக இருப்பேன்: கருணாநிதி
சென்னை: மலேசியத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்துவேன் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
மலேசியாவில் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராஃப்) அமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்த அமைப்பின் தலைவரான வழக்கறிஞர் வாய்தமூர்த்தி நேற்று சென்னை வந்தார்.
முதல்வர் கருணாநிதியை நேற்று அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது மலேசியத் தமிழர் பிரச்சினை குறித்து விளக்கி, முதல்வரின் ஆதரவையும் கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், முதல்வர் கருணாநிதியை நாங்கள் எங்களது மூத்த தந்தையாக கருதுகிறோம். எங்களுக்காக முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதிதான். மற்ற தலைவர்களும் எங்களுக்காக ஆதரவு தெரிவித்தனர்.
அனைவரையும் நேரில் பார்த்து நன்றி தெரிவிக்கவே இங்கு வந்துள்ளேன். முதல்வரிடம் எங்களது பிரச்சினையை விளக்கினேன். அவரும் பரிவாக கேட்டுக் கொண்டார். மலேசிய அரசுடன் பேச்சு நடத்த வேண்டும் என மீண்டும் பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்திக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.
அதற்கு, எப்போதும் உங்களது போராட்டத்திற்கு நான் துணை இருப்பேன் என்று உறுதியளித்தார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களின் தாய் வீடு தமிழகம்தான். அந்தத் தமிழகத்தின் முதல்வராக உள்ள கருணாநிதி எங்களுக்கெல்லாம் அரணாக இருப்பார். அவரைப் பார்த்த பிறகு எங்களது பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் ஐ.நா. சபையை அணுகி முறையிடவுள்ளோம். தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என ஐ.நா.விடம் கோரவுள்ளோம் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications