நதிகளை இணைக்க ரூ.4.44 லட்சம் கோடி தேவை!
டெல்லி: நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க ரூ. 4.44 லட்சம் கோடி பணம் தேவைப்படும் என இதுதொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் ஜெய்பிரகாஷ் நாராயண் யாதவ் இந்தத் தகவலை தெரிவித்தார்.
இதுகுறித்து யாதவ் கூறுகையில், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வுக் குழு, நடத்திய பல்வேறு ஆய்வுகளின் இறுதியில், நாட்டில் உள்ள நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு ரூ. 4.44 லட்சம் கோடி நிதி தேவைப்படும் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற 35 முதல் 40 ஆண்டுகள் வரை காலம் பிடிக்கும்.
நதி நீர் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கட்ட நடவடிக்கை அறிக்கையையும், கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2வது கட்ட நடவடிக்கை அறிக்கையையும் தாக்கல் செய்தது. அக்குழுவின் பணிகள் இத்துடன் முடிவடைந்து விட்டன.
நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாட்டின் எந்தப் பகுதியும் வறட்சியாலோ அல்லது பெரு வெள்ளத்தினாலோ பாதிக்கப்படக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றார் யாதவ்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications