பாபர் மசூதி தினம் தியேட்டர்களில் செல்போனில் பேச தடை
சென்னை: பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 15வது ஆண்டு தினத்தையொட்டி தியேட்டர்களில் செல்போன்களில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்தத் தடை அமலில் இருக்கும்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் நெருங்கி வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையான பாதுகாப்பு ஏற்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தியேட்டர்களில் செல்போன்களில் பேச காவல்துறை தடை விதித்துள்ளது. டிசம்பர் 6ம் தேதி வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் செல்வோர் செல்போன்களைக் கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே கொண்டு சென்றாலும் தியேட்டருக்குள் செல்போன்களைப் பயன்படுத்தக் கூடாது, ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும்.
மேலும் தியேட்டர்களில் மெட்டர் டிடெக்டர் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட வேண்டும். படம் பார்ப்பவர்களை தியேட்டர் நிர்வாகங்கள் கூடுதல் ஊழியர்களை பணியில் அமர்த்தி தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications