ரேசன் அரிசி கடத்தல்-சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரை

சென்னை: புதுச்சேரி ரயில் நிலையத்தில் 2,000 டன் தமிழக ரேசன் அரிசி பிடிபட்டது குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் கன ஜோராக நடந்து வருகிறது. இதனை குடிமைப் பொருள் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி புதுச்சேரி ரயில் நிலையத்தில் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படவிருந்த 2,000 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தியபோது அது தமிழக ரேசன் அரிசி என தெரியவந்தது.
இந்த ரேசன் அரிசியை கடத்திய கும்பல் அதை வாங்க தனியார் வங்கியில் ரூ. 10 கோடி கடன் பெறப்பட்டதும் தெரியவந்தது.
இந்த கடத்தலில் ஆளும் தரப்புக்கு தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்ததால் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது.
இந்த விவகாரத்தில் தமிழகம் தவிர புதுச்சேரியும் சம்பந்தப்பட்டுள்ளதால் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பான ஆவணங்கள், விவரங்களையும் சிபிஐ இயக்குனர் விஜய் சங்கருக்கு தமிழக அரசு கடந்த 23ம் தேதியே அனுப்பி வைத்துவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.
புதுச்சேரியும் சிபிஐக்குப் பரிந்துரை:
இதற்கிடையே, அரிசி கடத்தல் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க புதுச்சேரி அரசும் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கூறுகையில், இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநர் முகுந்த் மித்திக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
ஆளுநர் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பது தொடர்பான கடிதத்தை விரைவில் அனுப்புவார் என நம்புகிறேன் என்றார் அவர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications