அதிமுக எம்.பி. ஜோதிக்கு முன்ஜாமீன்
சென்னை: ராஜ்யசபா அதிமுக எம்.பி. என்.ஜோதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
அதிமுக வழக்கறிஞரான, ராஜ்யசபா எம்.பி. ஜோதி மீது, சென்னையைச் சேர்ந்த அமர்நாத் ராவ் என்ற வழக்கறிஞர் சிபிசிஐடியில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில் காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பான பயணம் என்ற பெயரில் ஜோதி, மாநில அரசின் பணத்தில், பலமுறை டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கு தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார். இந்த வகையில் அவர் பல லட்சம் ரூபாய் அரசுப் பணத்தை மோசடி செய்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பான அரசு வழக்கறிஞர் குழுவில் ஜோதி ஒருபோதும் இடம் பெறவில்லை. எனவே காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பான பயணம் என்ற பெயரில் அரசுப் பணத்தை ஜோதி மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் அமர்நாத் ராவ் கோரியிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில், நவம்பர் 28ம் தேதி சிபிசிஐடி போலீஸார் ஜோதி மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி ஜோதி சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.சுதந்திரம் நேற்று ஜோதிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
அதன்படி, காவிரி நடுவர் மன்ற வழக்கு தொடர்பான பயணம் என்ற பெயரில் ஜோதி டெல்லி சென்றதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு என்று அரசுத் தரப்பில் கணக்கிடப்பட்டுள்ள தொகையான 10 லட்சத்து 27 ஆயிரத்து 417 ரூபாயை ஜோதி, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் 4 வாரங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும்.
ரூ. 25 ஆயிரம் தொகைக்கான உத்தரவாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். சிபிசிஐடி விசாரணைக்குத் தேவைப்படும்போது ஆஜராகி ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்தார்.
-
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications