போலி பாஸ்போர்ட்டில் பஹ்ரைன் செல்ல முயற்சி - இலங்கை தம்பதி கைது
திருச்சி: இந்திய பாஸ்போர்ட் மூலம் பஹ்ரைன் செல்ல முயன்ற இலங்கை தம்பதி திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (58). இவரது மனைவி அருணோதயம் (55). ராமச்சந்திரன் 1983ம் ஆண்டு முதல் பஹ்ரைனில் வேலை பார்த்து வருகிறார். அருணோதயம், கடந்த 1986ம் ஆண்டு இலங்கையிலிருந்து அகதியாக தமிழகம் வந்தார். மதுரை, மண்மலைமேடு பகுதியில் தங்கியிருந்தார்.
கடந்த 1996ம் ஆண்டு ராமச்சந்திரன், ஒரு டிராவல் ஏஜென்ட்டை அணுகி தனக்கும், தனது மனைவிக்கும் இந்திய பாஸ்போர்ட்டைப் பெற்றுத் தருமாறு கோரினார். இதற்காக தனது இலங்கை பாஸ்போர்ட்டை அவரிடம் கொடுத்தார். இதேபோல, அருணோதயத்திற்கு போலி பாஸ்போர்ட் பெற போலியான ஆவணங்களைக் கொடுத்து பெற்றார்.
இதையடுத்து இருவரும் இந்திய பாஸ்போர்ட் மற்றும் போலி பாஸ்போர்ட் மூலம் பஹ்ரைன் செல்ல முயன்றபோது திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடம் சிக்கினர். அவர்கள் போலீஸாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர். போலீஸார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications